Monday 31 January 2011

எனது நூல்கள்

1971 ஆம் ஆண்டிலிருந்து என் எழுத்துக்கள் அச்சாக்கம் பெற்று வருகின்றன . காதல் , தீபம் , கல்கி, தினமணி , தினமணி சுடர் , குமுதம் , குங்குமம் , முத்தாரம் , பூமுகம் , தேவி , மும்பை இதழ் சீர்வரிசை , படித்துறை , புதிய பார்வை , இலக்கிய சிறகு , திசை எட்டும் மற்றும் இணைய தமிழ் வார இதழான ' அம்பலம் ' இவைகளில் படைப்புகள் வெளியாகியுள்ளன .

குறிப்பிட்ட இதழ்களில் வெளியான என் படைப்புகள் அனைத்தும் எழு (7)புத்தகங்களாக உருமாற்றம் பெற்றுள்ளன . இவைகளைப் பற்றி என் வலைப்பூவில் குறிப்பிட வேண்டும் என உந்துதலால் வெளியிடுகிறேன் .


என் நூல்கள் எல்லாமே ' ஜி.ஜி.ஆர் ' - ஜி.ஜி.ராதாகிருஷ்ணன் எனும் பெயர்களைத் தாங்கி ( ஒரு புத்தகம் தவிர ) வெளிவந்துள்ளன .

சிறப்பு நேர்காணல்கள் :

இலக்கிய படைப்பாளர்களின் சாதனைகளை பெருமைகளை தமிழறிந்தவர்கள் அறிய வேண்டி வெளியிடப்பட்ட நூல் . கவிஞர்கள் , எழுத்தாளர்கள் , ஆய்வாளர், தொழில் நுணுக்கம் பெற்றோர் என பெரியவர்களின் பேட்டிகள் கொண்ட நூல் .

சென்னை ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது .

மறக்க முடியாதவர்கள் :

தமிழறிஞர்கள் , கவிஞர்கள் , எழுத்தாளர்கள் என 24 பிரமுகர்களின் சுருக்கமான வாழ்க்கை குறிப்புகள் கொண்ட புத்தகம்.

சென்னை யாழ் வெளியீடு மற்றும் ராஜம் வெளியீடு என் இரண்டு பதிப்பங்களும் வெளியிட்ட புத்தகம் இது .

ஊருக்கு நல்லது சொல்வேன் :

பாரதி எனக்கு ஆதர்சம் . ஆகவே அவரது வாசகம் என்னைக் கவர்ந்தது . வாழ்வியல் கட்டுரைகள் 34 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன . எல்லா வயதினரும் அச்சமின்றி படிக்க வேண்டும் எனும் பேரவாவினால் எழுதப்பட்ட புத்தகம் .

சென்னை ஐந்திணை பதிப்பகம் வெளியிட்ட நூல் .

நன்னெறி கதைகள் :

பெரிய புராணத்திலுள்ள கதைகளில் , சிறுவர்களுக்கான வகையில் தேர்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட புத்தகம் இது . 23 கதைகள் கொண்டது .

சென்னை தமிழ்ப் புத்தகாலயம் வெளியீடு .

சிந்தித்தனர் - சாதித்தனர் :

இந்தியா மற்றும் உலக அளவில் சாதனைகளை ,நற்புகழையும் பெற்ற 101 சான்றோர்களின் வாழ்க்கை குறிப்புகளை இரண்டு , மூன்று பக்கங்களில் தரப்பட்டுள்ள பொது அறிவிப்பு பெட்டகம் இது .

சென்னை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது .

கலவை :

சிறுகதை , கட்டுரை , நூல் திறனாய்வு ஆகியவற்றை தொகுத்து 34 தலைப்புகளில் வெளியான நூல் . மூவகை படைப்புகளை கொண்டதால் நூலின் பெயர் ' கலவை ' ஆனது .

சென்னை வள்ளி சுந்தர் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட நூல் .

விமர்சனங்களும் , கட்டுரைகளும் :

சிற்றிதழ்களில் வெளியான நூல் விமர்சனங்கள் மற்றும் தனிக் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்ட புத்தகம் . 28 தலைப்புக்கள் கொண்டது . இந்நூல் குரு ராதாகிருஷ்ணன் எனும் பெயரில் வெளியானது .

குறிஞ்சிப்பாடி அலமேலு பதிப்பகம் வெளியீடு .